பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய குமாரபாளையம் போலீஸார்

பல்வேறு குற்றசெயல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்களி டையே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்;

Update: 2023-06-16 09:00 GMT

குமாரபாளைய்த்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி காவல்துறையினர்

ஏற்படுத்திய போலீசார்

குமாரபாளையத்தில் பொதுமக்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்களிடையே அச்ச உணர்வை போக்கும் விதத்தில் குமாரபாளையம் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு  பேனர் வைத்து பிரசாரம் செய்தனர்.

காவல் ஆய்வாளர் தவமணி தலைமை வகித்து பேசியதாவது: இதில் சந்தேகப்படும் வகையில் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்க நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், வீட்டிற்கு பாதுகாப்பு  கொடுக்க காவல்துறை  நடவடிக்கை எடுக்கப்படும்.

இரவு நேரங்களில் உங்கள் பகுதிகளில் சந்தேகப்படும்படியான வாகனங்கள் இருந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.  புதிதாக வாடகைக்கு வரும் நபர்களிடம், வீட்டின் உரிமையாளர்கள், வாடகைக்கு வரும் நபர்களின் ஆதார் அட்டை நகல், போன் நம்பர் ஆகிய வாங்கி வைத்திருக்க வேண்டும். குமாரபாளையம் போலீசாரை தொடர்பு கொள்ள காவல் ஆய்வாளர் 94981 78425, காவல் உதவி ஆய்வாளர் 63794 03671 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்  என்றார் அவர்.


Tags:    

Similar News