குமாரபாளையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 17 -ல் மின் நிறுத்தம்
குமாரபாளையம், வெப்படை, உப்புபாளையத்தில் ஜூன் 17ல் மின் பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுமென மின் வாரியம் அறிவித்துள்ளது;
குமாரபாளையத்தில் ஜூன் 17ல் மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் ஜூன் 17 (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகளுக்காக காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் குமாரபாளையம் நகரம், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகர், புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை,எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு மற்றும் வளையக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
வெப்படையில் ஜூன் 17ல் மின் நிறுத்தம்
வெப்படை துணை மின் நிலையத்தில் ஜூன் 17ல் பராமரிப்பு பணிகளுக்காக காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யபடுகிறது. இதனால்பாதரை, பாதரை இந்திரா நகர், சின்னார்பாளையம், ஈ.கதூர், புதுமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாறைகாடு, சின்னாக் கவுண்டம்பாளையம், கலியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டன்பாளையம், எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
உப்புபாளையத்தில் ஜூன் 17ல் மின் நிறுத்தம்
உப்புபாளையம் துணை மின் நிலையத்தில் ஜூன் 17ல் பராமரிப்பு பணிகளுக்காக காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யபடுகிறது. இதனால்மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில், நவக்காடு, உப்புபாளையம், ஆத்திக்காட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.