மூன்று மாதத்தில் புதிய தாலுகா அலுவலக பணிகள் நிறைவு பெறும் :தாசில்தார் தகவல்
குமாரபாளையம் புதிய அலுவலக கட்டுமான பணிகள் மூன்று மாதங்களில் நிறைவு பெறும் என தாசில்தார் தகவல் தெரிவித்துள்ளார்;
குமாரபாளையத்தில் கட்டப்படும் தாசில்தார் அலுவலக புதிய கட்டிடம்
குமாரபாளையம் புதிய தாசில்தார் அலுவலக கட்டுமான பணிகள் மூன்று மாதங்களில் நிறைவு பெறும் என தாசில்தார் தகவல் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் தாலுகா அலுவலகம் 2016, பிப். 27ல் நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் துவக்கப்பட்டது. புதிய தாலுகா அலுவலகம் கட்டுமான பணிகள் நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் மாளிகை வளாகத்தில் 2 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. நிறைவு கட்டத்தை எட்டிய நிலையில் முழுவதுமாக பணி நிறைவு பெற நிதி தேவை என்று கூறப்படுகிறது. விரைவில் தாலுகா அலுவலகம் திறக்க பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை எழுந்தது. தற்போது மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு இன்னும் மூன்று மாதங்களில் கட்டுமான பணிகள், உள் கட்டமைப்பு பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.
இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது::குமாரபாளையம் புதிய தாலுகா அலுவலக கட்டிடம் பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. மீதியுள்ள பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. எலெக்ட்ரிக்கல், டைல்ஸ் உள்ளிட்ட உள் கட்டமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களில் பணிகள் யாவும் நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.