நகராட்சி சார்பில் தூய்மை இயக்க விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையம் நகராட்சி சார்பில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது;

Update: 2023-04-19 13:45 GMT

குமாரபாளையம் நகராட்சி சார்பில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சுகாதாரப்பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி பேசினார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சியில் தமிழக முதல்வர் உத்தரவுக்கிணங்க, நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில், என் குப்பை எனது பொறுப்பு மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு நகரங்களை பொது இடங்களை தூய்மை செய்தல் பணி நடைபெற்று வருகிறது.   பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் மக்கும் மக்காத குப்பைகளை தரம் தரம் பிரித்து கொடுத்தல், நெகிழி பயன்பாடு தடை பற்றியும், அதற்கு மாற்று பொருளாக துணிப் பைகள் பாத்திரங்கள் பயன்படுத்துதல் பற்றியும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த தடை.

சுற்றுச்சூழல் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்று நடுதல் பற்றியும், எடுத்துரைக்கப்படுகிறது. நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் உத்தரவின் படி ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், முதல்வர் விஜயகுமார் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுகாதார அலுவலர் ராமமூர்த்தி பங்கேற்று, மாணவ, மாணவிகளிடையே சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து விளக்கவுரையாற்றினார். துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்: சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு, நகரங்களில் பெரும் அளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளன. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் 2-வது சனிக்கிழமைகளில் பெரிய அளவில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தைப் பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காக்களில் கூட்டம் நடத்தியும், துண்டுப் பிரசுரம், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



Tags:    

Similar News