குமாரபாளையம் நகராட்சி குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குறைதீர் முகாமில் தூய்மை பணியாளர்கள் சேர்மன் விஜய் கண்ணனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் குறைதீர் முகாம் கமிஷனர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, வேலை பளு உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து சேர்மன் விஜய்கண்ணனிடம் மனு கொடுத்தனர்.
இது குறித்து விஜய்கண்ணன் கூறும்போது தூய்மை பணியாளர்கள் கொடுத்த மனுவினை பரிசீலித்து அரசு விதிமுறைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ.-க்கள் செல்வராஜ், சவுந்தரராஜன், சந்தானகிருஷ்ணன், கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, சியாமளா, நந்தினிதேவி, பாண்டிசெல்வி, விஜயா, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 65 பேர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் 40 பேர், பள்ளி கழிவறை பணியாளர்கள் 20 பேர் ஆக, 125 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.