ஏப். 30 -க்குள் சொத்து வரி செலுத்தி ஊக்கதொகை பெற அழைப்பு

குமாரபாளையத்தில் ஏப். 30 க்குள் சொத்து வரி செலுத்தி ஊக்கதொகை பெற நகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.;

Update: 2023-04-19 16:00 GMT

பைல் படம்

குமாரபாளையத்தில் ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தி ஊக்கதொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டப்பிரிவின்படி, ஏப்.30-ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதி உடையவர் ஆகின்றீர்கள். எனவே, குமாரபாளையம் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், நகராட்சி அலுவலக கருவூலம், பேருந்து நிலைய வரி வசூல் மையம், ஆகியவற்றில் காசோலை, வரைவோலை, ரொக்கமாக செலுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்துவரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 2023-24 ஆண்டின், முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்.30ம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீதம், அதிக பட்சமாக 5 ஆயிரம் ஊக்கதொகை பெற்று,பயனடையுமாறும், இதன் மூலம் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்: குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், வார சந்தை வளாகம், பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சி கடைகள் உள்ளன. இதில் பலரும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். வருட கடைசி என்பதால் வாடகை நிலுவை உள்ள கடையினர் வசம், ஆணையர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினர் வாடகையை செலுத்த சொல்லி நேரில் பலமுறை அறிவுறித்தினர். அதையும் மீறி வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உத்திரவின் பேரில் பாலக்கரை, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் உள்ள இரு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஓரிரு மாதங்கள் வாடகை செலுத்தாத கடையினரிடம் குறிப்பிட்ட காலத்தில் வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கபடும் என எச்சரித்தனர்.

Tags:    

Similar News