குமாரபாளையம் நில முகவர்கள் சங்கதினர் அன்னதானம்

குமாரபாளையம் நில முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2023-05-08 17:00 GMT

குமாரபாளையம் நில முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா நில முகவர்கள் நலச்சங்க பொறுப்பாளர்கள், பொதுக்குழு, செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் சார்பில் ஆண்டுதோறும் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குவது வழக்கம். தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால், இந்த ஆண்டு நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

இதில் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் இதர நபர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீர் மோர் கொடுத்த நிலையில், தலைவர் சின்னசாமி தலைமையில் நேற்று அன்னதானம் வழங்கினர். இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று அன்னதானம் வாங்கி சென்றனர்.

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா தலைவர் சின்னசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர் மையத்தில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் உள் நோயாளிகளுக்கு பால், பன் வழங்கப்பட்டதுடன், ஏழை மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் கல்வி உபகரணங்கள், கல்வி உதவித் தொகை, சிகிச்சையில் இருந்து வரும் ஏழை கூலி தொழிலாளிக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கணேசன், சரவணன், பெருமாள், ஆறுமுகம், சண்முகம், ஸ்ரீதர், வடிவேல், லட்சுமணன், மணிவண்ணன், மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News