குமாரபாளையம் காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டு விழா

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது.

Update: 2022-03-01 15:45 GMT

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது.

குமாரபாளையம் மாசித்திருவிழாவான அனைத்து சமூக காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா பிப். 22ல் நடைபெற்ற நிலையில் நேற்று மறு பூச்சாட்டு விழா மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு விழா நடைபெற்றது.

காளியம்மன் கோவிலில் இன்று காலை 10:00 மணியளவில் கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. மார்ச். 8ல் சக்தி அழைப்பு, மார்ச். 9ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச். 10ல் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேர்த்திருவிழா, மார்ச். 11ல் தேர்த்திருவிழா மற்றும் வாண வேடிக்கை, மார்ச். 12ல் மஞ்சள் நீர் திருவீதி உலா, மார்ச். 13ல் ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கள்ளிபாளையம் காளியம்மன் கோவிலில் நேற்று மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது.

Tags:    

Similar News