குமாரபாளையம் காளியம்மன் கோவில் பூ மிதி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் பூ மிதித்தல் விழா நடைபெற்றது.

Update: 2022-03-09 11:45 GMT

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மகா குண்டம் பூ மிதித்தல் விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், மகா குண்டம் பூ மிதித்தல் விழாவையொட்டி நேற்று மகா குண்டம் பூ மிதித்தல் விழா நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரி சதாசிவம் குண்டம் இறங்கினார். இதையடுத்து 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்கினர். மார்ச். 10ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 11ல் தேர்த்திருவிழா மற்றும் வாண வேடிக்கை, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 12ல் மஞ்சள் நீர் திருவீதி உலா, மார்ச். 13ல் ஊஞ்சல் விழா ஆகிய திருவிழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

விழாக்குழு தலைவர் ரகுநாதன் உள்பட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, நகரமன்ற தலைவர் விஜய்கண்ணன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அம்மனை தரிசித்தனர். குமாரபாளையம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குமாரபாளையம் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் காத்திருந்தனர்.

கோட்டைமேடு காளியம்மன் கோவில், தேவாங்கர் மாரியம்மன், 24 மனை மாரியம்மன், பெரிய மாரியம்மன், அம்மன் நகர் எல்லை மாரியம்மன், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News