குமாரபாளையம் பாஜகவினரின் இலவச கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்ட செயலர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது.
இதில் கண்ணில் புரை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், தலைவலி ஆகியவைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
முகாமில் மருத்துவர்கள் கூறியதாவது:
ரத்ததானம் செய்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிகின்றது.புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகின்றது. இதனால் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதால், ரத்த அழுத்தம் சீராகி, அதனால் மாரடைப்பு வராமல் தடுக்கிறது, பக்கவாதம் வருவது குறைகிறது. கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்று நோய் வரமால் தடுக்கலாம். சுறுசுறுப்புடனும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர்.
நிர்வாகிகள் மாவட்ட பொது செயலர் வக்கீல் சரவணராஜன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல், நகர தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்ற்ன்ர்
இதனிடையே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்திரவின்படி, பா.ஜ.க.வினர் அந்தந்த பகுதி பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளுங்கள் என்றதன்படி,குமாரபாளையம் பா.ஜ.க.வினர் மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில், கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.
இதில் கட்சியினர் பஸ் நிறுத்தத்தில் இருந்த பழைய சாமான்கள் அகற்றி, ஒட்டடை அடித்து, தூய்மையாக பெருக்கி, சாணம் போட்டு பூசியும் விட்டனர். இவர்கள் சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். இது போல் ஒவ்வொரு பகுதியும் தூய்மை பணி மேற்கொள்வோம் என பா.ஜ.க.வினர் கூறினர்கள்.