குமாரபாளையத்தில் பட்டதாரி இளம்பெண் மாயம்: கிரைம் செய்திகள்..

குமாரபாளையத்தில் பட்டதாரி இளம்பெண் மாயம் உள்ளிட்ட கிரைம் செய்திகள்..;

Update: 2023-07-29 07:45 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் சியாமளா, 23. பட்டதாரி. இவர் அதே பகுதியில் உலா ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இவர் வீட்டிற்கும் செல்லவில்லை. மகளை காணமல் பெற்றோர் ஜெராக்ஸ் கடைக்கு வந்து பார்த்த போது, மாலை ஒரு மணிக்கே சென்றது தெரியவந்தது. உறவினர், தோழியர் வீடுகளில் எல்லாம் தேடியும் பலனில்லை. இந்நிலையில் இவரது உறவினர் மகளுக்கு போன் செய்து, பிடித்தவருடன் செல்கிறேன், தேட வேண்டாம், என்று சியாமளா கூறியுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சியாமளாவை தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவி மாயம்

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே வசிப்பவர் சுப்ரமணி, 43. இவரது 19 வயது மகள், குமாரபாளையம் அருகே வட்டமலை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஜூலை 27ல் காலை கல்லூரிக்கு வந்தவர், வீடு திரும்பவில்லை. அதே நாள் காலை 09:25 மணியளவில் கல்லூரியில் இருந்து சீருடையில் வெளியில் சென்றதாக கல்லூரி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால், குமாரபாளையம் போலீசில் சுப்ரமணி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குபப்திவு செய்து குமாரபாளையம் போலீசார் தேடி வருகிறார்கள்.

டூவீலர், டெம்போ மோதிய விபத்து

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் காஸி, 30. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி தயாரிப்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் அரியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு, தனது மாமியார் தாரா காஸி, 50, மற்றும் மனைவி பாத்திமா ஆகிய மூவரும் ஹோண்டா டியோ டூவீலரில் பெருந்துறை நோக்கி, நேற்று காலை 08:00 மணியளவில் சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் மூன்று பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி ஜஹாங்கீர் காஸி, மற்றும் அவரது மாமியார் தாரா காசி ஆகியோர் உயிரிழந்தனர். பாத்திமா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News