அரசு ஆண்கள் மேல்நிலைப்பளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பளியில் 1987,88ல் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. இதில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் நினைவுகளையும், தாங்கள் தற்போது செய்து வரும் அரசு பணி, தனியார் பணி, வழக்கறிஞர் பணி மற்றும் சொந்த தொழில் உள்ளிட்டவைகள் குறித்தும், தங்கள் குடும்பத்தார் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகளை மேளதாளம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. ரங்கநாதன், ஈஸ்வரமூர்த்தி, தில்லைக்கரசி, சரோஜா உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினர். தில்லைகுமார், சிவகுமார், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிறு சந்திப்பது என்றும், தங்கள் படித்த பள்ளிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் கவிராஜ், அந்தோணிசாமி ஆகியோர் செய்தார்கள். அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கள் குமார், சுதா, தமிழ்ச்செல்வி, விஜயா, கலைவாணி, சுசீலா, சுமதி, கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.