குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update: 2022-04-20 13:45 GMT

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், 2013, செப்.13ல் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இதன் முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மண்டல, கல்லூரிக்கல்வி இயக்குனர் எழிலன் பங்கேற்று, தமிழ் 32, ஆங்கிலம் 32, கணிதவியல் 21, கணினி அறிவியல் 9, வணிகவியல் 36 ஆக மொத்தம் 130 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

இவர் பேசியதாவது:- மாணவர்கள் அரசு மற்றும் வங்கி சார்ந்த போட்டி தேர்வுகளில் விடா முயற்சியுடன், தன்னம்பிக்கையுடன் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தன் மீது நம்பிக்கை வைத்து சுயதொழில்களில் ஈடுபட்டு தொழிலதிபர்களாக உயர வேண்டும். இவ்வாறு பேசினார்.

இதில் அரசு பி.எட், கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர், தட்டான்குட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் செல்லமுத்து, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள், துறை தலைவர்கள் தமிழ் ஞானதீபன், ஆங்கிலம் ரூபி, கணிதவியல் ரமேஷ்குமார், கணினி அறிவியல் கலாவதி, வணிகவியல் ரகுபதி, வணிக நிர்வாகவியல் சரவணாதேவி, பொருளியல் ராஜ்குமார், இயற்பியல் அனுராதா, வேதியியல் கோவிந்தராஜ் ஆங்கில உதவி பேராசிரியை கீர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News