குமாரபாளையம் திமுகவினர் வெண்ணந்தூர் ஊராட்சியில் தேர்தல் பிரசாரம்

வெண்ணந்தூர் ஊராட்சியில், குமாரபாளையம் பகுதி தி.மு.க.வினர், வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.;

Update: 2021-09-28 03:56 GMT

தமிழகத்தில்,  உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி,  அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை களத்தில் நிற்க வைத்து, அவரவர் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி அறிவுறுத்தலின்படி, குமாரபாளையம் தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், வெண்ணந்தூர் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் துரைசாமிக்கு வாக்கு சேகரித்து, தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

அவ்வகையில், மாட்டுவேலம்பட்டி, அரமத்தாம்பாளையம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வீடுவீடாகச் சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து பிரச்சாரம் செய்தனர். நிர்வாகிகள் ராஜ்குமார், விஸ்வநாதன், ரங்கநாதன், வெங்கடேசன், பாஸ்கரன், இனியா குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News