குமாரபாளையம் குற்றச் செய்திகள்

குமாரபாளையம் கிரைம் செய்திகள் சிலவற்றை இங்கே காணலாம்;

Update: 2023-09-24 09:30 GMT

பைல் படம்

கிரேன்- டூவீலர் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர்கள் பிரேம்குமார், 20, முரளிதரன், 21, அஜய், 21. மூவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 07:30 மணியளவில், பிரேம்குமார் டியோ டூவீலரை ஓட்ட, முரளிதரன், அஜய் இருவரும் பின்னால் உட்கார்ந்து வந்தனர். இவர்கள் சேலம் கோவை புறவழிச்சாலை, கோட்டைமேடு மேம்பாலம் அருகே இந்தியன் தாபா அருகே சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, எதிரே வேகமாக வந்த கிரேன் இவர்கள் வந்த டூவீலர் மீது மோத, மூவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மூவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, கிரேன் ஓட்டுனர் குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்த குமார், 38, என்பவரை கைது செய்தனர்.

மனைவி மாயம், கணவர் போலீசில் புகார்

குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் வசிப்பவர் சந்தியா, 18. இவருக்கும், இவரது கணவர் ஞானசேகரனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அவரது அம்மா வீட்டிற்கு செல்வதும், கணவர் நேரில் போய் சமாதனம் செய்து அழைத்து வருவதுமாக இருந்து வந்துள்ளது. ஆக. 7ல் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை, தன் தம்பியுடன் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தன் மனைவியை கண்டுபிடித்து தர வேண்டி புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கூலி பெண் தொழிலாளி பணி செய்யும் போது மயங்கி விழுந்து  மரணம்

குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் மணி, 61. தனியார் விசைத்தறி பட்டறை கூலித் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை 11:30 மணியளவில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மயங்கி விழுந்தார். பட்டறை உரிமையாளர், இவரது கணவர் சண்முகத்திற்கு தகவல் தெரிவிக்க, நேரில் வந்த சண்முகம், இவரை சிகிச்சைக்காக ஈரோடு ஜி.ஹெச்.க்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். இவரை பரிசோதித்த டாக்டர் வழியில் இறந்ததாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Tags:    

Similar News