சாலை விபத்தில் முதியவர் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார்;

Update: 2023-09-21 14:00 GMT

பைல் படம்

 டூவீலர் மீது ஜீப் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே கத்தேரி தொட்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் செங்கோடன், 56. விவசாயி. இவர் செப்.12ல் குமாரபாளையம் பவர் ஹவுஸ் அருகில் காலை 06:45 மணியளவில் பஜாஜ் டூவீலரில் வந்த போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த பொலிரோ ஜீப் வாகனம் இவர் வந்த டூவீலர் மீது மோதியதில், செங்கோடன் பலத்த காயமடைந்தார். இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து, விபத்திற்கு காரணமான ஜீப் ஓட்டுனர் பவானியை சேர்ந்த ஜீப் ஓட்டுனர் பாலாஜி, 46, என்பவரை கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் நடந்து சென்ற  முதியவர் உயிரிழந்தார்

குமாரபாளையத்தில் செப்.4ல் ஆனந்கூர் பிரிவு சாலை பகுதியில் நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்தார். இவருக்கு உறவினர், பிள்ளைகள் யாரும் இல்லை என்பதும், பல வருடங்கல் முன்பு சேலத்திலிருந்து குமாரபாளையம் வந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தததாக கூறியுள்ளார். இவருக்கு ஈரோடு ஜி.ஹெச்.ல் சிகிச்சையளித்து வந்த நிலையில், செப். 14ல் இறந்தார். இது குறித்து வி.ஏ.ஒ. ஜனார்த்தனன் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 தனியார் கல்லூரி மினி பஸ்கவிழ்ந்து 19 பேர் காயம்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அருகே மங்கரங்கம்பாளையம் விவேகானந்தா கல்லூரியில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர், சங்ககிரி அருகே மரவம்பாளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 64. இவர் நேற்று இரவு 07:45 மணியளவில் கல்லூரியில் பணியாற்றும் 19 பணியாளர்களுடன் மினி பேருந்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது, சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி மினி பேருந்து கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 19 நபர்களும் காயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

 சரக்கு வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம், ராதாபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த், 29. சென்னை தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில், குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் தன் நண்பர் ராஜசேகரை பார்த்து விட்டு செல்லும் போது, தனது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து போக, நண்பர் வசம் காலி கேன் வாங்கி கொண்டு பெட்ரோல் வாங்க சேலம், கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பிரிவு பகுதியில் நடந்து சென்ற போது, இவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகன ஓட்டுனர், இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசாரிடம் பிரசாந்த் அளித்த புகாரில், குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்

Tags:    

Similar News