குமாரபாளையத்தில் போலீஸார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் கைது

நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் படுகாயம்;

Update: 2023-09-06 12:00 GMT

பைல் படம்

குமாரபாளையம் போலீஸார்  மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் கைது 

குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் இளமுருகன் மற்றும் தலைமை காவலராக பணிபுரிபவர் மகேந்திரன். ஆக. 18, இரவு குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அங்குள்ள ஏ.டி.எம் மையத்தை ஆய்வு மேற்கொண்ட பிறகு, மீண்டும் அடுத்த பகுதிக்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது, சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் தூக்கத்தின் காரணமாக முன்னாள்  போலீசார் சென்று கொண்டிருந்த  டூவீலர் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய, கள்ளக்குறிச்சி மாவட்டம், இராவூர் பகுதியை சேர்ந்த முகேஷ், 30, என்பவர் கைது செய்யப்பட்டார்.

 சரக்கு வாகனம் மோதி தனியார் நிறுவன பணியாளர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம், ராதாபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த், 29. சென்னை தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணியளவில், குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் தன் நண்பர் ராஜசேகரை பார்த்து விட்டு செல்லும் போது, தனது டூவீலரில் பெட்ரோல் தீர்ந்து போக, நண்பர் வசம் காலி கேன் வாங்கி கொண்டு பெட்ரோல் வாங்க சேலம், கோவை புறவழிச்சாலை, அருவங்காடு பிரிவு பகுதியில் நடந்து சென்ற போது, இவருக்கு பின்னால் வந்த சரக்கு வாகன ஓட்டுனர், இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசாரிடம் பிரசாந்த் புகார் கூற, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் தாராபுரத்தை சேர்ந்த இர்பான் செரீப், 29, என்பவரை கைது செய்தனர்.

குமாரபாளையத்தில் பெண்ணிடம்  நகை பறிப்பு 

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரில் வசிப்பவர் சுசிலா, 45. ஆக. 7ல் தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவருக்கு வைத்தியம் செய்ய, தனது இரண்டரை பவுன் தங்க நகையை அடகு வைக்கவேண்டி, ஒரு பையில் நகையை போட்டுக்கொண்டு, வங்கிக்கு போக, புறவழிச்சாலை, அமிர்தா அபார்ட்மெண்ட் பகுதியில் காலை 09:00 மணியளவில் நடந்து சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்த வந்த டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வந்த நபர், இவரது கையில் இருந்த பையை பிடுங்கி சென்றார். அந்த பதட்டத்தில் தந்தையை காப்பாற்ற வேண்டும் என மருத்துவமனைக்கு சென்று விட்டார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு தந்தையை அழைத்து வந்த பின், நடந்த சம்பவத்தை குமாரபாளையம் போலீசில் சொல்லி, பறித்து சென்ற நகையை மீட்டு, குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி , குமாரபாளையம் போலீசில் புகார் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

 வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் புகார்

குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியில் வசிப்பவர் சந்தியா, 18. இவருக்கும், இவரது கணவர் ஞானசேகரனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு, அவரது அம்மா வீட்டிற்கு செல்வதும், கணவர் நேரில் போய் சமாதனம் செய்து அழைத்து வருவதுமாக இருந்து வந்துள்ளது. ஆக. 7ல் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை, தன் தம்பியுடன் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில் தன் மனைவியை கண்டுபிடித்து தர வேண்டி புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

--

Tags:    

Similar News