அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது
போலி பத்திரம் தயாரித்து 30 லட்சம் பண மோசடி செய்தவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்;
குமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் தம்பதியர் படுகாயம்
திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியயை சேர்ந்தவர் சம்பத், 60. கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 12:15 மணியளவில் தனது டூவீலரில், தன் மனைவி சரஸ்வதி58, என்பவரை உட்கார வைத்துக் கொண்டு, வளையக்காரானூர் பகுதியில் வசிக்கும் தங்கள் மகள் கவிதாவை பார்க்க சென்றனர். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று வேகமாக வந்த கார், டூவீலர் மீது மோதியதில் தம்பதியர் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது
குமாரபாளையம் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. டேவிட், சந்தியா தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். ஓலப்பாளையம் பிரிவு சாலை அருகே மது விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் மது விற்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 48, என்பது தெரியவந்தது.
போலி பத்திரம் தயாரித்து 30 லட்சம் பண மோசடி
குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் பாண்டியன், 53. ரியல் எஸ்டேட் தொழில்.இவரிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த சரவணன், 50, குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி, 46, இருவரும் குமாரபாளை யம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2017, ஜூன், 28, ஜூலை 31 ஆகிய தேதிகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு ஒரிஜினல் பத்திரங்கள் கொடுத்து, மூன்று வருடங்கள் முன்பு ஒரு ரூபாய் வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர்.
வட்டி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், பாண்டியன் அசல் பணம் கேட்டுள்ளார். அதற்கும் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் போலி பத்திரம் தயாரித்து சரவணன், அவரது மனைவி கண்ணம்மாள் பெயருக்கு சொத்தினை மாற்றி எழுதி பத்திரப்பதிவு செய்துள்ளனர். ஆனால் ஒரிஜினல் பத்திரம் பாண்டியன் வசம் உள்ளது.
இதனை தற்காலிக சார்பதிவாளராக பணியாற்றிய தீபிகா 4 நாட்கள் முன்பு பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆவண எழுத்தர் பியூலா, ஈரோடு சுரேஷ் உள்ளிட்டோர் இந்த போலி பத்திரம் தயாரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இது மனுதாரர் பாண்டியனுக்கு தெரியவர, பெரியசாமி, சரவணன், சார்பதிவாளர் தீபிகா, ஆவன எழுத்தர் பியூலா உள்ளிட்டோர், பெரியசாமி, சரவணன் கொடுக்கும் பணத்தை பேசாமல் வாங்கி கொள்ளுங்கள், இல்லையேல் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளதாக, பாண்டியன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.