அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது
குமாரபாளையத்தில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்;
பைல் படம்
அனுமதியில்லாமல் மதுபானம் விற்ற இருவர் கைது
குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மதுபானம் விற்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கோட்டைமேடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மது விற்றதாக, ஆலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த முருகையன்(44,), என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமி ருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.இதே போல் உதவி ஆய்வாளர் சந்தியா ஆய்வு செய்ததில், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மதுபானம் விற்ற, பவானியை சேர்ந்த வேல்(48,), என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தார்.
சீட்டு நடத்தியவர் பணம் தராததால் கல்லால் தாக்கி, விரலை ஒடித்த நபர் தலைமறைவு
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் சுந்தர்பாலாஜி(48.), விவசாயி. இவரிடம் சடையம்பாளை யத்தை சேர்ந்த ராமசாமி(45,), என்பவர் ஒரு லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார். இதில் 60 ஆயிரம் ரூபாய் கொடுத் தது போக, மீதி 40 ஆயிரம் கொடுக்க வேண்டியிருந்தது. இதனை கொடுக்க தாமதம் ஆனதால், ராமசாமியின் மகன் கவுதம்(22,) என்பவர் நேற்று முன்தினம் சுந்தர்பாலாஜி வீட்டிற்கு சென்று, தகாத வார்த்தை பேசியதுடன், கல்லால் தாக்கியதாகவும், இடது கை மோதிரவிரலை ஒடித்ததாகவும் கூறப்படுகிறது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வர, கவுதம் அங்கிருத்து தப்பியோடி தலைமறைவானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை டீச்சர்ஸ் காலனி சர்வீஸ் சாலையிலிருந்துதான், குமாரபாளையத்தி லிருந்து பவானி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்றாக வேண்டும். நேற்று இரவு 7 மணியளவில் அரசு பஸ் பவானி செல்வதற்காக சர்வீஸ் சாலையிலிருந்து புறவழிச்சாலையில் திரும்பியது. அப்போது சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு வாகனம், அரசு பஸ் பின்பகுதியில் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்ததுடன், பின்புற பகுதி சேதமானது. சரக்கு வாகனத்தின் முன்புற பகுதி சேதமானதுடன், அதன் ஓட்டுனர் சேலத்தை சேர்ந்த செல்வகுமார்(27,), பலத்த காயமடைந்தார். பஸ்ஸில் பின் சீட்டில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் போனது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.