குமாரபாளையத்தில் இன்றைய கிரைம் செய்திகள்

Crime News Tamil -திருட வந்த இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு மொபைல் போனை விட்டுச்சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-10-08 03:13 GMT

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் வாயில் டார்ச் வைத்தவாறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டான்.

Crime News Tamil -குமாரபாளையம் கிரைம் செய்திகள்:

திருட வந்த இடத்தில் சார்ஜ் போட்டுவிட்டு மொபைல் போனை விட்டுச்சென்ற திருடன்

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் சித்திரவேல்,36. இவர் நேற்று முன்தினம் வேலை நேரம் முடிந்து இரவில் ஓட்டலை பூட்டி விட்டு சென்றார். சிறிது நேரத்தில் கடையின் உள்ளே இருந்து சத்தம் வருவது கேட்ட அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்த போது, கடைக்குள் இருந்து ஒருவர் எட்டிக்குதித்து செல்வது தெரியவந்தது.

இது குறித்து கடை உரிமையாளர் சித்ரவேலுக்கு தகவல் தர, நேரில் வந்த அவர் கடையயை திறந்து, கடையில் பொருத்தப்பட்டு இருந்த கி.சி.டி.வி.யை பார்த்தார். அதில் வாயில் டார்ச் லைட் வைத்தவாறு உள்ளே நுழைந்த திருடன் ஒருவன், பொருட்களை நோட்டமிட்டு, கல்லா பெட்டியில் இருந்த பணம் 20 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது.

மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டூவீலரையும் திருட முயற்சி செய்துள்ளான். கல்லா பெட்டி அருகே திருடன் தனது மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளான். பொதுமக்கள் வரும் சத்தம் கேட்டதும் சார்ஜ் போட்ட போனை மறந்து, போனை விட்டு விட்டு சென்று விட்டான். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

சாலை விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே எக்ஸல் கல்லூரியில் பி.ஈ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் சென்னையை சேர்ந்த ஆகாஷ், 20. ஆயுதபூஜை விடுமுறை முடிந்து நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து குமாரபாளையம் வந்த இவர் காலை 08:00 மணியளவில் பல்லக்காபாளையம் எக்ஸல் கல்லூரி செல்ல சேலம் கோவை புறவழிச்சாலையை நடந்து கடக்கும் போது, ஸ்விப்ட் டிசையர் காரின் ஓட்டுனர் வேகமாக வந்து இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைகாக ஈரோடு ஜி.ஹெச்.இல் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இவர் நேற்று காலை 08:00 மணிக்கு இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் குமாரபாளையம் வந்து, கார் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு கொடுத்தனர். இதன்படி கார் ஓட்டுனர் சேலம் அருகே உள்ள மிட்டாபுதூர் பத்மநாபன், 34, என்பவரை பிடித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

போலி லாட்டரி விற்ற வழக்கில் 77 வயது முதியவர் உள்ளிட்ட 6 பேர் கைது, 5 மொபைல் போன் பறிமுதல்

குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் 77 வயது முதியவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதுடன் 5 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில் மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது.

கையும் களவுமாக பிடிபட்ட ஈரோடு ரமேஷ், 25, பள்ளிபாளையம் தினேஷ்குமார், 30, குமாரபாளையம் வெங்கடேசன், 34, ஈஸ்வரமூர்த்தி, 36, அல்லிமுத்து, 57, ஆகிய 5 பேர்களிடம் 5 டச் மொபைல் போன்களும், தம்மண்ணன் வீதியை சேர்ந்த லோகநாதன், 77, என்ற முதியவரிடம் கேரளா லாட்டரி என்று விற்ற போலி லாட்டரி சீட்டுகள் 252ம் பறிமுதல் செய்யப்பட்டு, 6 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News