'மாஸ்க் போடலியா? கட்டு அபராதம்' போலீசார் நடவடிக்கை

கொரோனா விதி மீறலில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2021-04-20 06:02 GMT

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் (மாதிரி கார்ட்டூன் படம்)

குமாரபாளையத்தில் மாஸ்க் போடாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து, மாஸ்க் போடுவதின்  அவசியம் குறித்து கூறினர்.

குமாரபாளையம் பகுதியில் மாஸ்க் போடாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம்  விதித்தனர். குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்  கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால்,  நகராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமாரபாளையம் போலீசார்  நகரின் முக்கிய  இடங்களில் முக கவசம் அணியாமல் வருவோர், பொது இடங்களில் எச்சில் துப்புவோர் மீது அபராதம் விதித்து வருகின்றனர். இறைச்சி கடைக்கு வருவோர்,காய்கறி மார்க்கெட்டுக்கு வருவோர் என  மாஸ்க் போடாமல் பலர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி  அபராதம் விதித்தனர். அவர்கள் கையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, மாஸ்க் போடுவதின்  அவசியம் குறித்துக் கூறி, எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News