பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
குமாரபாளையத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மல்யுத்த வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல், பா.ஜ.க. எம்.பி.யின் பாலியல் வன்கொடுமை கண்டித்தும், உச்சநீதி மன்றம் உத்திரவினை அமல்படுத்த கோரியும் குமாரபாளையத்தில் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் போடப்பட்டன.
இதில் சி.பி.எம். நிர்வாகி சக்திவேல், சி.பி.ஐ. நிர்வாகி வழக்கறிஞர் கார்த்தி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகி சித்ரா, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜ., எம்பி.,யும் ஆன பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து தொடர்ந்து 9வது நாளாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பாக்சிங் வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைக்கும் வரை, போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என டில்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, டில்லி ஜந்தர் மந்தரில், மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சிங் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள் கோரிக்கைப்படி, பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்தனர்.
இதற்கிடையே, தொடரும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். பிரிஜ் பூஷன் சிங் தான் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்றும் விசாரணையை எதிர் கொள்ள தயார் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.