குமாரபாளையத்தில், புதிய பலம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையத்தில் பழைய காவிரி பாலத்தை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், புதிய பாலம் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே 4 பாலங்கள் இருக்கின்றன. இதில் நகராட்சி அருகே இருக்கும் பலம் மிகவும் பழசானதாகும். மேலும் மிக மோசமாகவும் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த பாலத்தின் வழியாக கன ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. டூவீலர், கார்கள் மட்டுமே சென்று வருகின்றன. இருப்பினும் அந்த பாலம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
பாலம் மோசமாகும்போது பராமரிப்பு பணி மட்டும் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள், நடந்து வருகிறது. இந்த பாலம் குமாரபாளையம், பவானியை இணைக்கும் மிக முக்கியமான பாலம் ஆகும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குமாரபாளையத்துக்கு வேலைக்கு வருவதற்கு இந்த பாலம் மட்டுமே உள்ளது. பாலம் பழுதானால் பல கிலோமீட்டர் சுற்றித்தான் குமாரபாளையத்திற்கு வரவேண்டும்.
அதனால், புதிய பாலம் ஒன்று கட்டினால் மட்டுமே போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழில்கள் நடப்பதால் புதிய பாலம் காட்டினால் தொழில் வளர்ச்சி அடைய உதவும்.