குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழ்

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.;

Update: 2023-04-07 00:26 GMT

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 6, 7 8ம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. சென்னை நேதாஜி நவபாரத் பவுண்டேஷன் தலைவர் மகேஷ் பங்கேற்று, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழும், சீருடையும் வழங்கினார்.

விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓபிளிராஜ்‌, பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, டாக்டர் சண்முகசுந்தரம், விடியல் பிரகாஷ், கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், நலவாரியம் செல்வராஜ்‌ மற்றும் கராத்தே பயிற்சியாளர்‌ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஈரோட்டில் புரூஸ்லி சிட்டோ ரியோ கராத்தே அமைப்பின் சார்பில் கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையம் இந்தியன் கராத்தே பயிற்சி மைய மாணவர்கள் 15 பேர் பங்கேற்று பரத், தர்ஷினி ஆகியோர் இரண்டாம் பரிசும், 9 பேர் மூன்றாம் பரிசும், நான்கு பேர் 5ம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பயிற்சியாளர் பன்னீர்செல்வம், நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பாரதி உள்பட பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News