கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

குமாரபாளையத்தில் கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கும் விழா நடந்தது

Update: 2023-04-18 05:15 GMT

குமாரபாளையத்தில் அக்னி சிறகுகள் பொதுநல அமைப்பின் சார்பில் கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

குமாரபாளையத்தில் கராத்தே மாணவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

குமாரபாளையம் உடையார்பேட்டையில் அக்னி சிறகுகள் பொதுநல அமைப்பின் சார்பில் கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. 

கியோகுசின் கராத்தே அமைப்பின் திறனாய்வு போட்டி தலைமை பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பயிற்சியாளர், நோபிள் உலக சாதனையாளர் ஏகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 6, 7 8- ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அக்னி சிறகுகள் பொதுநல அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

சென்னை நேதாஜி நவபாரத் பவுண்டேஷன் தலைவர் மகேஷ் பங்கேற்று, மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி சான்றிதழும், சீருடையும் வழங்கினார்.  விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஓபிளிராஜ்‌, பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, டாக்டர் சண்முகசுந்தரம், விடியல் பிரகாஷ், கவுன்சிலர் அம்பிகா ராதாகிருஷ்ணன், நலவாரியம் செல்வராஜ்‌ மற்றும் கராத்தே பயிற்சியாளர்‌ பன்னீர்செல்வம், . விடியல் பிரகாஷ், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார் அன்புராஜ், ஆறுமுகம், ரமேஷ், ராம்கி,தீனா உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் கராத்தே பயிற்சி சாகசங்கள் செய்து காண்பித்தனர்.

இதையடுத்து, குமாரபாளையம் கிரேட் இந்தியன் கராத்தே மையத்தில் கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே சீருடை வழங்கும் விழா, நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், பயிற்சி ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில், சென்னை நேதாஜி நவ பாரத் பவுண்டேசன் சார்பில், தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்று, கராத்தே சீருடைகளை 75 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.

விழாவி மகேஷ் பேசியதாவது: மாணவ, மாணவியர்கள் பள்ளிபடிப்புடன், தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது மகிழ்ச்சி. இது ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பானது. பள்ளிப்படிப்பிலும் அதிக கவனம் கொண்டு நன்கு படித்து, பெற்றோர்களை மதித்து வாழ்வில் முன்னேற வேண்டும். சுபாஷ் சந்திரபோஸ் போல் வீரத்துடன் திகழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News