காளியம்மன் கோயில் பாலாலயம்: விமரிசையாக நடந்த இரண்டாம் கட்ட யாகசாலை பூஜை

குமாரபாளையம் காளியம்மன் கோயில் பாலாலயம் இரண்டாம் கட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன;

Update: 2023-04-26 14:15 GMT

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் பாலாலயம் யாகசாலை பூஜைகள் விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

குமாரபாளையம் காளியம்மன் கோயில் பாலாலயம் இரண்டாம் கட்ட யாகசாலை பூஜைகள் நடந்தன.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி பாலாலயம் யாகசாலை பூஜைகள் துவக்கப்பட்டது. குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவான மகா குண்டம் மற்றும் தேர்த்திருவிழா மார்ச். 1 முதல் 5ம் தேதி வரை நடந்து முடிந்த நிலையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமூகத்தினர், ஒவ்வொரு வியாபார நிறுவனத்தினர், ஆட்டோ, டெம்போ, டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சங்கத்தார், தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பானை உற்பத்தியாளர்கள், உள்ளிட்ட பலரும் நாளுக்கு ஒரு பிரிவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோவில் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக விமானம் மற்றும் பரிவாரங்களுக்கு பாலாலயம் வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல் கால யாக சாலை பூஜை நேற்றுமுன்தினம் துவங்கியது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கமணி யாகசாலை பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் நிர்வாகிகள் ரகுநாதன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. நகர செயலர் செல்வம், அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நேற்று நடைபெற்றது.




Tags:    

Similar News