குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் மஞ்சள் நீர் திருவீதி உலா

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில் மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெற்றது.

Update: 2022-03-12 10:00 GMT

குமாரபளையத்தில் காளியம்மன் கோவில் மஞ்சள் நீர் திருவீதி உலா நடைபெற்றது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழாவில் பூ மிதித்தல், 2 நாட்கள் தேரோட்டம், வாண வேடிக்கை மற்றும் அம்மன் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது. நேற்று சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு திருவிழா கொடியிறக்கம் செய்யப்பட்டது.

கோவில் வளாகத்தில் புறப்பட்ட மஞ்சள் நீர் திருவீதி உலா, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவு பெற்றது. வழியெங்கும் பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றியதுடன் பக்தர்களும் மஞ்சள் நீராடினர்.

அர்ச்சகர்கள் சதாசிவம், சண்முகசுந்தரம், சண்முகம், கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News