குமாரபாளையத்தில் இன்று காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டு விழா
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மறு பூச்சாட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசித்திருவிழாவான அனைத்து சமூக காளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா பிப். 22ல் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று மறு பூச்சாட்டு விழா இரவு 10:00 மணியளவில் நடைபெறுகிறது. குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டு விழா நடைபெறவுள்ளது.
காளியம்மன் கோவிலில் நாளை காலை 10:00 மணியளவில் கொடியேற்று விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கள்ளிபாளையம் காளியம்மன் கோவிலில் இன்று மறு பூச்சாட்டு விழா நடைபெறவுள்ளது.