ஒளிக்கோடுகள் கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா
குமாரபாளையத்தில் ஒளிக்கோடுகள் கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் இலக்கியத்தளம் சார்பில் ஒளிக்கோடுகள் கவிதை தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா, புதுமலர் இதழாசிரியர் குறிஞ்சி தலைமை வகித்தார். இந்த புத்தகத்தை கவிஞர் மோகனரங்கன் வெளியிட, முதல் பிரதியை எழுத்தாளர் சத்தியபெருமாள் பாலுசாமி பெற்றுக்கொண்டார்.
கவிஞர் மல்லை ராமனாதன் பேசியதாவது:
இன்றைய நிலையில், இளைஞர்கள் புத்தகம் எழுதுவதிலும், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பு, வேலை, வெளிநாடு பயணம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ் மொழிக்கு மதிப்புக்கு கூட்டும் விதமாக, தமிழில் தங்கள் படைப்புகள் படைக்கப்படவெண்டும். அந்த புத்தகங்கள் எதிர்கால சந்ததிகளுக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த வழக்கறிஞர் ப.ப.மோகன், இலக்கிய தளம் இணை செயலர் பகலவன், கவிஞர் மல்லை ராமனாதன், சமூக ஆர்வலர் சித்ரா, கண்மணி, தங்கராசு, உலகநாதன், ரவி, மணியன் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். நூலாசிரியர் அன்பழகன் ஏற்புரையாற்றினார்.
இதையடுத்து, குமாரபாளையம் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.
குமாரபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில் மொழிப்போர் தியாகிகள் குறித்து அனைவரும் எடுத்துரைத்தனர். பங்கேற்ற அனைவரும் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர்.
இதில் முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.