இனி உங்க சொல்லுக்கு துணையாக நிற்கும் ஜே.கே.கே.என்., இலவச பல் ஆஸ்பத்திரி

பள்ளிபாளையத்தில் ஜே.கே.கே.என் கல்வி குழுமம் சார்பில் இலவச பல் மருத்துவமனை மற்றும் சேவை மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.;

Update: 2021-04-22 11:28 GMT

பள்ளிபாளையம், சேரன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.ராஜசேகரன், ஜே.கே.கே.என்., இலவச பல் மருத்துவமனையை துவக்கி வைத்தார்.

குமாரபாளையம், கொடைவள்ளல் ஜே.கே.கே.நடராஜா நினைவு இயக்கம் மற்றும் ஜே.கே.கே.நடராஜா  பல் மருத்துவமனையும் இணைந்து,இன்று  பள்ளிபாளையத்தில்  இலவச பல் மருத்துவமனை மற்றும் சேவை மைய திறப்பு விழாக்கள்  நடைபெற்றன.


பள்ளிபாளையம், சேரன் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே.ராஜசேகரன், இலவச பல் மருத்துவமனையை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஓம்சரவணா,  சேவை மையத்தை துவக்கி வைத்து, முன்னிலை வகித்தார். ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சிவக்குமார், பல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிபேசினார். இவ்விழாவில் பல்மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர். 


இந்த மருத்துவமனை வார நாட்களில்  (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்பட உள்ளது. சனிக்கிழமை மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பல் சொத்தை, பல் கூச்சம், ஈறுகளில் இரத்தக்கசிவு, ஈறு சிதைவு நோய், வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், ஆறாத வாய்ப்புண்கள் போன்ற அனைத்து பல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பல் பரிசோதனை முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இலவச செயற்கை பல் செட் வழங்கப்பட உள்ளது. மேலும், இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை இலவசமாக பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த இலவச பல் மருத்துவமனையின் வாயிலாக இலவச பல் மருத்துவ  உதவிகள் கிடைக்கும் என்பதால் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல  சேவை மையத்தின் வாயிலாக  5 லட்ச மருத்துவ காப்பீடு, பான் கார்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் உதவித்தொகை, நலவாரிய பதிவு போன்ற அரசு சார்ந்த உதவி பெறும் சேவைகளை  எளிதில் பள்ளிபாளையம் பகுதி மக்களுக்கு  கிடைக்கப்பெறும் என்பதால் இந்த இரண்டு திறப்புவிழாக்களும்  பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

பல்லு போனா சொல்லு போச்சுன்னு கிராமத்துல ஒரு சொலவடை உண்டு. இனி அதற்கு அச்சம் தேவை இல்லை. இனிமேல் ஜே.கே.கே.என். பல் ஆஸ்பத்திரி உங்களை பார்த்துக்கும்.

Tags:    

Similar News