குமாரபாளையம் ஜே.கே.கே.என் கல்வி நிறுவன தலைவரின் தாயார் இயற்கை எய்தினார்

நாமக்கல் மாவட்டத்தில் பிரபல கல்வி நிறுவனமான ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை அவர்களின் தாயார் இயற்கை எய்தினார்.

Update: 2022-01-13 14:51 GMT

தனலட்சுமி நடராஜா செட்டியார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரையின் தாயாரும், நாமக்கல் மாவட்டத்தில் பிரபல தொழில் அதிபரும், ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களை நிறுவியவருமான காலஞ்சென்ற ஜே.கே.கே.நடராஜா செட்டியார் அவர்களின் மனைவியுமான தனலட்சுமி நடராஜா செட்டியார் அவர்கள் வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 87.

அம்மையாரின் மறைவுக்கு ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் சார்பில் மட்டுமல்லாமல், நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்களும், ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோரது  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அம்மையாரின்  இறுதிச் சடங்கு நாளை (14ம் தேதி) குமாரபாளையத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News