அந்தியூர் கபடி தொடரில் வென்ற ஜே.கே.கே.என் கல்லூரி அணி!
அந்தியூர் கபடி தொடரில் வென்ற ஜே.கே.கே.என் கல்லூரி அணிக்கு ஊக்கத்தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது.
ஈரோடு அந்தியூரில் நடைபெற்ற கபடி தொடரில் ஜே கே கே நடராஜா கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
அந்தியூர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தெய்வத்திரு. சிவா அவர்கள் நினைவாக நடத்தும் கோப்பையின் நான்காம் ஆண்டு கபடி விளையாட்டுத் தொடர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்த அக்டோபர் 28ம் தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நான்கு இடங்கள் பிடித்த அணிகளுக்கு பரிசுகளும் கோப்பையும் வழங்கப்பட்டது.
இந்த தொடரில் ஜே கே கே நடராஜா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி மாணவர்கள் வெற்றி பெற்றனர். முதல் இடத்தைப் பிடித்த இந்த அணிக்கு முதல் பரிசாக ஊக்கத்தொகை ரூபாய் 15,000 வழங்கப்பட்டது. மேலும் வெற்றிக்கோப்பையும் பெற்றனர். வெற்றிக்கோப்பையுடன் ஜே கே கே என் பொறியியல் கல்லூரி மாணவர்கள். ஜே கே கே என் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. என். செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஓம் சரவணா ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக தலைவர் என் செந்தாமரை அவர்களும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா அவர்களும் கல்லூரி முதல்வர் அவர்களும் உடற்கல்வி இயக்குனர் அவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.