ஜீவானந்தம் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஜீவானந்தம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-08-22 06:00 GMT

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஜீவானந்தம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஜீவானந்தம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் பாரதிநகர், நகராட்சி தொடக்கப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி ஜீவானந்தம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி ஆகிய இருவரின் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இருவரின் திருவுருவ படத்திற்கு தலைமை ஆசிரியர் பூங்கோதை மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பள்ளி மாணவிகளுக்கு சதுரங்க போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ஜீவானந்தம் மற்றும் தீரர் சத்தியமூர்த்தி ஐயாவை பற்றி மாணவ மாணவிகளுக்கு விமலா எடுத்துக் கூறினார். இதில் தீனா, அங்கப்பன், உள்பட பங்கேற்றனர்.

ப. ஜீவானந்தம் ( 21 ஆகஸ்ட் 1907  – 18 சனவரி 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாசாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.



Tags:    

Similar News