போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய ஜெயிலர்

குமாரபாளையத்தில் ஜெயிலர் பட ரசிகர்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது;

Update: 2023-08-10 13:00 GMT

போக்குவரத்து இடையூறு ஏற்படுத்திய ஜெயிலர் குமாரபாளையத்தில் ஜெயிலர் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தினார்.

பொதுவாக போலீசார் போக்குவரத்து சரி செய்துதான் பார்த்து இருப்போம். ஆனால் மாறாக, ஒரு ஜெயிலர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார். ஆம்..குமாரபாளையம் ராஜம் தியேட்டரில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ளது. இதன் முதல் காட்சியை காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர்.

தியேட்டர் வளாகத்தில் இடம் இல்லாமல் வெளியில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டன. தியேட்டர் பக்கவாட்டில் தனியார் பள்ளி, அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு பி.எட். கல்லூரி, ஆகியன உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இதைப்பற்றி எவ்வித கவலை படாமால், ஐந்த சாலையில் இருபுறமும் தங்களது டூவீலர்களை நிறுத்திவிட்டு ரசிகர்கள் படம் பார்க்கச் சென்று விட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அப்படியே இருந்ததால் அவ்வழியே செல்லும் டெம்போ, மினி பஸ்கள், கார்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டது.


Tags:    

Similar News