காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-11-20 01:00 GMT

படவிளக்கம் : குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் நடந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சுப்ரமணியம், நக்கீரன், சொக்கலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.


மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஆதிசேஷன் தலைமையில், அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்திராவின் திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்குள்ள ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகர துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலர் கோகுல்நாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

Tags:    

Similar News