குமாரபாளையத்தில் சுயேட்சை வேட்பாளர் அழகேசன் அதிரடி பிரச்சாரம்

குமாரபாளையத்தில் சுயேச்சை வேட்பாளர் அழகேசன் அதிரடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Update: 2022-02-13 13:45 GMT

குமாரபாளையத்தில் அரசியல் கட்சியினருக்கு இணையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 12வது வார்டு சுயேட்சை வேட்பாளர் அழகேசன்.

குமாரபாளையம் 12வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர் அழகேசன். 12வார்டின் முழுமைக்குமான சாக்கடை வரைபடம் தயார் செய்து ஆய்வுக் குழு ஏற்படுத்தி வாரம் ஒரு முறை ஆய்வு செய்யப்படும். மாதம் ஒரு முறை சொந்த செலவில் கொசு மருந்து அடிக்கப்படும்.

பொதுக்கழிப்பிடம் சீரான முறையில் குறிப்பிட்ட கால அளவில் சுத்தம் செய்யப்படும். சுகாதார பணியாளர்களை கொண்டு தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பதை உறுதி செய்வோம். ஒற்றை பெற்றோர் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள குடும்பங்களில் இருக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சேர உதவி செய்யப்படும்.

தகுதியான நபர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேள தாளங்கள் முழங்க அரசியல் கட்சியினருக்கு இணையாக அதிக கூட்டத்துடன் சுயேட்சை வேட்பாளர் பிரச்சாரம் செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து வருகிறார். இந்த வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர், தி.மு.க. கூட்டணி கட்சி சி.பி.எம். வேட்பாளர் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் இவரது பிரச்சார கூட்டத்தை கண்டு பிரமித்துள்ளனர்.

Tags:    

Similar News