குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் திறப்பு

குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2023-05-21 09:45 GMT

குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளம் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளம் குறுக்கே தரைமட்ட பாலம் இருந்தது. மழைக்காலங்களில் பாலத்தின் மீது கழிவுநீர் செல்லும் நிலை நீடித்து வந்தது. பல வருடங்களாக இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் முயற்சியின் பேரில் இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பணிகள் நிறைவு பெற்று, நேற்று இதன் திறப்பு விழா நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகர தி.மு.க. செயலர் செல்வம் தலைமையில் நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்று, ரிப்பன் வெட்டி, பாலத்தை திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் மாணிக்கம், ராஜாராம், செல்வராஜ், கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளம் உள்ளது. இதன் மேல் தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழை காலங்களில் தரை மட்ட பாலம் மூழ்கி, சாலை துண்டிக்கபட்டு, பொதுமக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க பல வருடங்களாக கோரிக்கை வைத்தனர். அதன்படி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நடவடிக்கையின் பேரில் பாலம் கட்டுமான பணி சில மாதங்கள் முன்பு துவங்கியது. தற்போது இந்த பாலம் கட்டுமான பணிகள் யாவும் முழுமை பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.

Tags:    

Similar News