குமாரபாளையத்தில் தியான மண்டபம் திறப்பு விழா

குமாரபாளையத்தில் தியான மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது;

Update: 2023-02-21 16:00 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற தியான மண்டபம் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், நமக்கு நாமே திட்டதின் கீழ், குமாரபாளையம் நகராட்சி சார்பில் தியான மண்டபம் 30 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதில் ஜீவன் முக்தி ரோட்டரி அறக்கட்டளையினர் 50 சதவீத பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

இதன் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று ரிப்பன் வெட்டி தியான மண்டபத்தை திறந்து வைத்தார். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News