அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குமாரபாளையத்தில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அரசு உதவி பெறும் எஸ் எஸ் எம் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. கல்லூரி தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர் ஈஸ்வர், புருஷோத்தமன் மற்றும் முதல்வர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்று பாராட்டி பேசினர்.
கல்லூரி நாட்களில் தங்களுக்கு ஆசனாக விளங்கி, பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மாணவர்கள் சேம நலநிதி, முன்னாள் மாணவர்கள் சார்பாக நன்கொடையாக வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க தலைவர் பன்னீர்செல்வம், துணைத் தலைவர் செந்தில்குமார், துணை செயலர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள் சாதனை:
இந்திய அளவில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் கோவை கஸ்தூரி சீனிவாசன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள 44 பொறியியியல் மாற்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 106 அணிகள் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஜவுளி தொழில்நுட்பத்தில் 43 ஆண்டுகள் அனுபவம் பெற்ற குமாரபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து 5 அணிகள் பங்கேற்றன. இதில் விகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இரு மாணவர்களை கொண்ட அணி இரண்டாவது பரிசாக 15 ஆயிரம் பரிசாக வென்றனர்.
பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் இளங்கோ, முதல்வர் டாக்டர் பாலமுருகன் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினர். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பாராட்டினர்.