ரியல் எஸ்டேட்டுக்கு முறையற்ற அனுமதி: நடவடிக்கை எடுக்கக் கோரி சி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

குமாரபாளையம் அருகே ரியல் எஸ்டேட்க்கு முறையற்ற அனுமதி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-08-29 11:00 GMT

மாரபாளையம் அருகே ரியல் எஸ்டேட்க்கு முறையற்ற அனுமதி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையம் அருகே ரியல் எஸ்டேட்க்கு முறையற்ற அனுமதி வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் வீட்டு மனைக்கு ஆயக்கட்டு விவசாய நிலத்தை தரிசு நிலம் என்று போலி ஆவணத்தை உருவாக்கி கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சி.பி.ஐ. சார்பில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலர் அர்த்தனாரி தலைமை வகித்தார். சட்டவிரோத அனுமதியை ரத்து செய்ய வேண்டும், வீடு கட்ட கொடுக்கப்பட்ட மின் இணைப்புகள் ரத்து செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நகர செயலர் கணேஷ்குமார், நிர்வாகிகள் சுப்பிரமணி, பாலதண்டாயுதம், சங்கரலிங்கம் சரசு, பூங்கொடி, லட்சுமி, விஜய்ஆனந்த்.

Tags:    

Similar News