குமாரபாளையம் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

குமாரபாளையம் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2024-03-31 15:45 GMT

குமாரபாளையம் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் போக்குவரத்து அதிகம் இருப்பது வழக்கம். நேற்று விடுமுறை நாள் என்பதுடன், தேர்தல் பணிக்காக பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றும், வந்தும் கொண்டிருப்பதால் குமாரபாளையம் புறவழிச்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் பணிகள் கடந்த 5 மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அனைத்து வாகனங்களுள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டதால், வேகமாக செல்ல முடியாமல், மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலை எஸ்.எஸ்.எம். கல்லூரி முதல் சுமார் மூன்று கி.மீ. தூரம் நீடித்தது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் சித்ரா, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கத்தேரி பிரிவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்து, தள்ளுவண்டி கடைகள் வைத்திருப்பதால் சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அனைத்து வாகனங்களும் எளிதில் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இப்பகுதியில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம்,அமைத்தால் அப்பகுதியில் உள்ள வட்டமலை, எதிர்மேடு, வளையக்காரனூர், தட்டாங்குட்டை,

ஜெய்ஹிந்த நகர், பாரதி எஸ்டேட், பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்பகுதியில் இருப்பவர்கள் ஏதாவது அவசர சிகிச்சை பெறுவதென்றால் குமாரபாளையம் நகர பகுதிக்குள் வந்துதான் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் தாங்கள் இடத்தினை ஆய்வு செய்து பொதுமக்களின் நலன் கருதி ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News