மே 10 ல் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர் வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே, 10 ல் நடைபெறவுள்ளது;

Update: 2023-05-06 12:45 GMT

மே 10ல் மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே, 10ல் நடைபெறவுள்ளது. இது குறித்து சங்ககிரி செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே, 10-ஆம் தேதி காலை 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், மின்வாரிய அலுவலகம், சங்ககிரி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News