மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை: பள்ளிபாளையம் க்ரைம் செய்திகள்
பள்ளிபாளையம் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு க்ரைம் செய்திகள்.;
மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை
பள்ளிபாளையம் பகுதியில் வசிப்பவர் சகுந்தலா, 85. இவரது கணவர் அண்ணாமலை சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். தனியே வாழ்ந்து வந்த இவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நவ. 15ல் பகல் 12:00 மணியளவில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிகொண்டு தீ வைத்து கொண்டார்.
பலத்த தீக்காயம் அடைந்த இவர் சிகிச்சைகாக ஈரோடு ஜி.எச்.இல் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குடி போதையில் காவிரி ஆற்றில் விழுந்தவர் சடலம் மீட்பு
பள்ளிபாளையம், நவக்காடு, மாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 37. கூலி தொழிலாளி. நவ.15 இரவு 01:30 மணியளவில் காவிரி ஆற்றில் மது போதையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார், வெப்படை தீயணைப்பு படையினர் உள்ளிட்டவர்கள் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டது.
குழந்தை திருமணம் செய்தவர் ஒரு வருடம் கழித்து கைது
பள்ளிபாளையம், பெருமாள்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் கோடீஸ்வரன், 22.இவர் 18 வயது நிறைவடையாத பெண்ணை 31.08.2020ல் அரசால் தடை செய்யப்பட்ட குழந்தை திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் தலைமறைவானார். இவர் நேற்று அவரது வீடு உள்ள பகுதியில் வந்ததாக தகவல் அறிந்து, சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயலலிதா புகாரின் பேரில், நேற்று இவர் கைது செய்யப்பட்டார்.