ஜேகேகே ரங்கம்மாள் துவக்கப்பள்ளியில் மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்.

ஜேகேகே ரங்கம்மாள் துவக்கப்பள்ளியில் மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.;

Update: 2023-12-08 14:00 GMT

கொடை வள்ளல் ஜே கே கே நடராஜா நினைவு இயக்கம் சார்பாக JKKNS.ஓம்சரவணா LLB., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்.

நிகழ்வின் தலைப்பு : மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்.

நிகழ்வு நடைபெற்ற இடம் : ஸ்ரீராமர் திருக்கோயில் மண்டபம், ஜேகேகே ரங்கம்மாள் துவக்கப்பள்ளி எதிரில், குமாரபாளையம்

நிகழ்வு நடைபெற்ற நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

நிகழ்வு நடைபெற்ற நாள் : டிசம்பர் 7, 2023

முகாமில் இடம்பெற்றவை

  • கண் அறுவை சிகிச்சை முகாம் (The Eye foundation Erode )
  • காது மூக்கு தொண்டை சிகிச்சை (MR Hospital Erode, Dr. Vikramvel MS ENT.,)
  • நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (SRI Medical clinic PPM, Dr. Vigneshkanth MD., PULMO)
  • எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை (Aranav ortho care KPM, Dr. Naresh MBBS.,D.N.B. Ortho)
  • மாபெரும் ரத்த தான முகாம் (Government Hospital Erode)
  • இலவச பல் சிகிச்சை பரிசோதனை முகாம் ( JKKN Dental College, Kumarapalayam)

கொடை வள்ளல் ஜே கே கே நடராஜா நினைவு இயக்கம் சார்பாக JKKNS.ஓம்சரவணா LLB., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் இலவச பலதுறை மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம், டிசம்பர் 7ம் தேதி குமாரபாளையம் ஸ்ரீராமர் திருக்கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.


JKKNS.ஓம்சரவணா LLB., அவர்களின் பிறந்தநாளுக்கு பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் கேக் வெட்டப்பட்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்தளிக்கப்பட்டது. 


வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 800 கலந்துகொண்டு பயன் பெற்றனர்.


முகாமிற்கு வந்தவர்களுக்கு ஜே கே கே ரங்கம்மாள் அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் சார்பாக இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தகுதியான நபர்களுக்கு உயர்தர இலவச கண் கண்ணாடியும் தேவைப்படுவோருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.


மேலும் தகுதியுடைய நபர்களுக்கு 1200 ரூபாய் மதிப்புள்ள நுரையீரல் செயல் திறன் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது.முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது

Tags:    

Similar News