குமாரபாளையம் ஜேகேகேஎன் பார்மஸி கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

குமாரபாளையம் ஜேகேகேஎன் பார்மஸி கல்லூரி மாணவர்களுக்கான 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

Update: 2021-11-20 11:57 GMT

பட்டமளிப்பு விழாவில் தலைமை உரையாற்றும் ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

குமாரபாளையம், ஜேகேகேஎன் பார்மஸி கல்லூரியில் டி பார்ம் மாணவர்களுக்கான 7வது பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த விழா பிரார்த்தனை பாடலுடன் துவங்கியது. கல்லூரி முதல்வர் டாக்டர். சம்பத்குமார் வரவேற்றார்.  ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை ஏற்று விழாவில் தலைமை உரை ஆற்றினார். ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். 

ஒரு மாணவிக்கு பட்டம் வழங்கு ஸ்ரீமதி செந்தாமரை மற்றும் இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர்.

கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசிய அவர்,'பட்டதாரிகள் கற்றலை கல்லூரியோடு விட்டுவிடாமல் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். அவர்களின் அறிவுத்திறமையை வளர்த்தெடுப்பதில் கற்றலே முதன்மையானதாக இருக்கிறது.' இவ்வாறு அவர் பேசினார். 

பட்டம் வழங்கும் முதன்மை விருந்தினர்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து முதன்மை விருந்தினராக இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மனநல மருத்துவர் மற்றும் ஆலோசகர், டாக்டர். எஸ். ஆனந்த், பெண் குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். அந்த கல்வியால் பெண்கள் மனஉறுதியையும் நம்பிக்கையையும் பெறுவார்கள் என்றும்  கூறினார். 

2015-2021 வரையிலான டி பார்ம் மாணவர்களுக்கு ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை, இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர் எஸ்.ஆனந்த் ஆகியோர்  பட்டங்களை வழங்கினர்.

விழா மேடையில் விருந்தினர்கள்.

 இந்த நிகழ்ச்சியில் சிறந்த டி பார்ம்  பயிற்சி விருது, மாணவிகள் பிரியங்கா,ரீஜா, ரெஜி, அஸ்வதி, மாணவன் பொன்சேரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த மாணவர் விருது அமிதா மேரி ஜானுக்கு வழங்கப்பட்டது. கல்வி நிறுவன இன்னோவேஷன் கவுன்சில் -ன் சிறந்த டீம் லீடர் விருது மாணவர் அருணுக்கு வழங்கப்பட்டது. விழா முடிவில் ஜேகேகேஎன் பார்மஸி கல்லூரியின் துணை முதல்வர் சண்முக சுந்தரம் நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

Tags:    

Similar News