குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா
தியானம் செய்தால், உடல் நலம், மன நலம், ஆரோக்கியமாக இருக்கும்;
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது.
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் பங்கேற்று, இளங்கலை, மற்றும் முதுநிலை படித்த 400 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி, வாழ்த்தி பேசியதாவது:
திருமூலர் எழுதிய திருமந்திர பாடல் வரிகள் படித்து, தினமும் 45 நிமிடம் தியானம் செய்தால், உடல் நலம், மன நலம், ஆரோக்கியமாக இருக்கும். திருவள்ளுவர் கூறிய வழியில் நடக்க வேண்டும். மேலாண்மை பண்புகளான காலம் தவறாமை, தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு பாடங்களை கற்பதோடு நின்று விடாமல் மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
தமிழகத்தில், பட்டதாரிகளின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படித்த துறையிலேயே வேலைவாய்ப்பு என்பது பலருக்கு எட்டாக் கனியாகிவிட்டது. அதனால் பலர், கிடைத்த வேலையில் இருந்துகொண்டே தங்களுக்கு விருப்பமான துறைக்காகத் தங்களை தயார்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார்கள்.ஒருவர், தான் படித்த துறையிலேயே பட்டம்பெற்று, அதேதுறையில் மேற்படிப்பை முடித்து வேலைவாய்ப்பை அமைத்துக்கொண்டால் பிரச்னையில்லை. ஆனால், அந்தத் துறையால் அவருக்கு வாய்ப்புகள் அமையாதபோது அவர் கூடுதலாகப் படிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான், அவர் எதிர்பார்க்கும் வேலை கிடைக்கும்.என்றார் அவர்.
பட்டங்கள் பெற்ற மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பேராசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.