அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மின்வாரிய அலுவலர்

குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மின்வாரிய அலுவலர் கல்வி உபகரணங்கள் வழங்கினார்;

Update: 2023-07-05 11:00 GMT

குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

குமாரபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்வாரிய அலுவலர் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

குமாரபாளையம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் 25 பேருக்கு நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா குளத்துகாடு மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தலைமை வகித்து, மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசியதாவது:

நாளைய பாரதம் மாணவ, மாணவியர் கைகளில் உள்ளது. நன்கு பயின்று நல்ல பணியில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்றிட வேண்டும். கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், நம்மை ஆளாக்கிய பெற்றோர்களை எப்போதும் மறக்காமல் இருக்க வேண்டும். தனி திறமைகளை வளர்த்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றார் அவர். இதில் உதவி பொறியாளர்கள் சீனிவாசன், ஸ்ரீதர், பொதுநல அமைப்பை சேர்ந்த சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.




Tags:    

Similar News