குமாரபாளையத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

குமாரபாளையத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-12 12:30 GMT

கஞ்சாவுடன் பிடிபட்டவர்கள். 

குமாரபாளையம்,  சேலம் - கோவை புறவழிச்சாலை பகுதியில்,  இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி  உள்ளிட்ட போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  கோவை பக்கமிருந்து சேலம் நோக்கி இரு கார்கள் வேகமாக வந்தன. அந்த இரு கார்களை நிறுத்தி விசாரித்த போது, அதில் இருந்த நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள். இரண்டு கார்களின் டிக்கியில் தலா 4 பாலிதீன் மூட்டைகள் இருந்தன.

விசாரணையில்,  அவை கஞ்சா என்பதும், சேலத்திற்கு கொண்டு போகபட்டது என்றும் தெரிய வந்தது. 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததுடன், இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வந்த கோவையை சேர்ந்த கிஷோர்குமார், 25, அப்துல்ஜலிஸ், 33, முஜிபுர்ரஹ்மான், 29, சுல்தான், 30, ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த குமார், கோவையை சேர்ந்த கவுதம், பாஷா, முகமது அலி, வரசநாட்டை சேர்ந்த பார்த்திபன், சந்திரமோகன், தனுஷ்கோடி, தனுஷ்கோடியின் மாமா ஊத்துக்குளியை சேர்ந்த அன்னக்கொடி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் ஏ.டி.எஸ்.பி. செல்லபாண்டியன், திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், டி.எஸ்.பி. லட்சுமணன் விசாரணை செய்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News