காவிரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்
குமாரபாளையம் காவிரி ஆற்றில் நேற்றும் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.;
காவிரியில் விஜர்சனம் செய்யப்பட்டவிநாயகர் சிலைகள்
குமாரபாளையம் காவிரி ஆற்றில் நேற்றும் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக குமாரபாளையம் நகரம் முழுவதும் ஆங்காங்கே பக்தர்களால் வைக்கப்பட்ட ஒரு அடி முதல் 9 அடி வரை கொண்ட 34 விநாயகர் சிலைகள் தினசரி சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டு வந்தது. மூன்றாவது நாளான நேற்றுமுந்தினம் பக்தர்களால் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.
குமாரபாளையத்தில் நகராட்சி அருகில் உள்ள காவிரி கரையோர பகுதியில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஐயப்பன் திருமண மண்டபம் முன்பு காவிரி ஆற்றில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் வைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் கொண்டுவரும் சில நபர்கள் மட்டும் காவிரி ஆற்றில் இறங்க அனுமதிகப்பட்டனர். ஏராளமான போலீசார், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் போலீஸார் சிலைகள் விஜர்சனம் செய்ய செப்.20 கடைசி நாள் என அறிவித்திருந்தனர். ஆனால் ஐந்து நாட்கள் கொலு வைத்த நபர்கள் நேற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பேண்டு, வாத்தியங்களுக்கு அனுமதி இல்லை. அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்து வந்த பொதுமக்கள், சிலைகளை காவிரியில் விஜர்சனம் செய்து வழிபட்டு திரும்பி வந்தனர்.