குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழா: இரு அணிகளாக கொண்டாடிய காங்கிரஸ்

குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் இரு அணிகளாக காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-10-02 15:45 GMT

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவும், இந்தியாவின் இரண்டாவது பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழாவும், காமராஜர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது.

குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் முன்னாள் நகர தலைவர் மோகன்வெங்கட்ராமன், சுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் துணை தலைவர் சிவகுமார் தலைமையில் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர துணை தலைவர் சிவகுமார் தலைமையில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் சென்று, நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலர் கோகுல்நாத், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆதிசேசன், நெசவாளர் அணி மாநில செயலர் விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News